Friday, August 19, 2022

கவியரங்க நாயகன் கவிஞர் அறிவுமதி......

 

*கவியரங்க சூப்பர் ஸ்டார் ஊற்றங்கரைக்கு வருகிறார்* 


*ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர் அறிவுமதி தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் கவியரங்க சூப்பர் ஸ்டார் நெல்லை ஜெயந்தா* !


*தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் ஏராளமான திரைப்பாடல்களை குறிப்பாக ராமன் தேடிய சீதை " திரைப்படத்தில் ''என்ன புள்ள செஞ்ச நீ '' என்னும் பாடலையும் ''நண்பா நண்பா ''என்கிற பாடலையும் ,பிரிவோம் சந்திப்போம் படத்தில் ''இரு விழிகள் சிறகடிக்கும் ''என்கிற பாடலையும் எழுதியவர் நெல்லை ஜெயந்தா*

*திணை மயக்கம் உள்ளிட்ட பல கவிதை நூல்களை வெளியிட்டவர் அவர்*

*கோவையில் நடைபெற்ற செம்மொழி தமிழ் மாநாட்டில் கவியரங்கில் கலந்து கொண்டு கலைஞர் ரசிக்கும் வண்ணம் அரசமரம் அருகே ஆல மரம் இருக்கும். இதில் விழுதுகள் இருக்கும் ஆனால் கலைஞரே நீ அதிசய ஆலமரம் எனவே உனக்கு அருகே விருதுகள் இருக்கிறது. நட்சத்திரங்கள் நாட்டை ஆள ஆசைப்படுகிறது. ஆனால் அத்தனை நட்சத்திரங்களையும் உடைத்தது சூரியன். அந்த வள்ளூவன் தமிழ் கிடைத்தபோது அதிகாரங்களை பாடினான். இவர் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் தமிழை பாடினார். தன்மானம் காத்த தமிழ்தலைவர்கள் பெயர்களை உயிருள்ளவரை நாக்கில் பச்சைக்குத்திக்கொள்வோம். என்று கவிதை பாடியவர்*

*நெல்லை ஜெயந்தா எழுதிய முத்தமிழே நீ வாழ்க; மூவேந்தே நீ வாழ்க, வாழ்க, என்கிற பாடல் கலைஞர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலைஞரின் வரவேற்ப்பு பாடலாக ஒளிபரப்பபடுகிறது*

*வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் நெருக்கமான நட்பின் அடிப்படையில் வாலி பதிப்பகம் துவக்கி பல கவிதை நூல்களை வெளியிட்ட பெருமைக்குரிய கவிஞர் ஊற்றங்கரைக்கு வருகிறார்*

*ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட நிகழ்வில் கலந்து கொண்டு திராவிடம் வளர்க்கும் தமிழ் என்னும் தலைப்பில் மிகச்சிறப்பான உரையை தந்தவர் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தமிழ் இலக்கிய பேரவையின் கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசித்த கவிஞர்  மீண்டும் ஊற்றங்கரை மக்களின் மனம் கவர வருகிறார் வாருங்கள் வரவேற்போம்*❗ 

No comments:

Post a Comment