11-ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டுகளால் செவிடப்பாடி என்று அறியப்படும் இன்றைய ஓசூர் தமிழ்நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் தொழில் நகரம் ஆகும்.கருநாடக மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த ஓசூர் தொகுதியில் இருந்து தேர்ந்துதேக்கப்பட்டவர் தான் இளைஞர் நலம் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் . திருமிகு .பாலகிருஷ்ண ரெட்டி
தமிழ்நாடு திராவிட இயக்கங்களின் கோட்டையாக இருப்பினும் ஓசூர் மட்டும் தனித்து தேசிய இயக்கத்தின் கோட்டையாக இருந்தது .இது வரை நடைபெற்ற தேர்தல்களில் ஒரு முறை கூட திராவிட இயக்கத்தின் சார்பில் சட்ட மன்ற வேட்பாளர் தேர்ந்தேடுகப் படவில்லை .இந்த வரலாற்றை உடைத்த பெருமை இவரையே சாரும்
வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரையே கல்வி கற்கும் வாய்ப்பு கிட்டியது .அடிப்படையில் இவர் ஒரு விவசாயி . வேளாண்மையோடு ,செங்கல் தொழிலையும் செய்து வருகிறார்

2001 இல் அ.இ.அ.தி.மு.கவில் இணைந்த இவர் .2௦11 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஓசூர் ஒசூர் நகராட்சி தலைவராக அ.இ.அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்
. 2016 ஆம் ஆண்டுநடைபெற்ற ஒசூர் சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஓசூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திராவிட இயக்க சட்ட மன்ற உறுப்பினர் என்கிற பெருமை கிட்டியது. முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பதவியேற்ற சில மணிநேரங்களுக்குள் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் 2017 ஆகஸ்ட் ல் அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்தின் படி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு பாலகிருஷ்ண ரெட்டி அவர்களை ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பாராட்டரங்கத்தில் தலைமையுரையாற்ற அன்புடன் அழைக்கிறோம்
No comments:
Post a Comment