Saturday, August 20, 2022

பாடலாசிரியர் கபிலன்......

 


*ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர் அறிவுமதி தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் பாடலாசிரியர் கபிலன்*

*சங்க இலக்கியத்தின் கபிலன் சுந்தரத் தமிழெடுத்தவன்*
*தற்காலத்தமிழில் கபிலன்  சந்தனத் தமிழ் எடுத்தவர்*.

*தமிழ் இலக்கிய ஆய்வாளர்.சென்னை மண்ணின் மக்கள் வாழ்வை அவர்களின் உடலுழைப்புப் பாடல்களான 'கானா பாடல்களில்' தன் ஆய்வை முடித்தவர்*.

*முறையாக தமிழ் இலக்கியம் பயின்றவர்*.

*எகிறி குதித்தேன் வானம் இடித்தது என்றபாடல் மூலம் திரையில் குதித்தவர்*.

*உன் சமையலறையில் நீ உப்பா சர்க்கரையா என்று கேட்டு திரைப்பாடல்களில் புதிதாய்ச் சிந்தித்தவர்*.

*கரிகாலன் காலப்போல கருத்திருக்கு குழலு என்று புது உவமைச் சொன்னவர்*

*ஏராளமான வெற்றிப்பாடல்கள் இவரின் விரல்களிலிருந்து கசிந்தவை*

*உன்ன நெனச்சி நெனச்சி உருகிப்போனேன் மெழுகா என்றவர்
பொன்னியின் செல்வன் படத்திலும் இவரின் பாடல் இடம் பெற்றிருக்கிறது என்பது  உண்மை* 


No comments:

Post a Comment