Saturday, August 20, 2022

சொற்கோ முனைவர் கருணாநிதி......

 


இலக்கிய மேடைகளின் இளவரசன்👲 – “சொற்கோ முனைவர் கருணாநிதி”* *வரவேற்போம் வாருங்கள் !*

💐💐💐💐💐💐💐💐

*ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர் அறிவுமதி தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் இலக்கிய மேடைகளின் இளவரசன் – “சொற்கோ முனைவர் கருணாநிதி*


*♦️முனைவர் சொற்கோ இரா. கருணாநிதி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். 20 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியர் - பணி அனுபவம் பெற்றவர்*.

*♦️1991-இல்  பாரதிதாசன் நூற்றாண்டு விழாவைnahட்டி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய  தமிழக அளவிலான கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றார்.    முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதன் இப்பரிசினை வழங்கினார்*

*♦️பல தங்கப்பதக்கங்கள் பெற்றவர். பள்ளிப்பருவத்திலிருந்து மரபுப்பாக்கள் எழுதும் ஆர்வமுடையவர். நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி மாணவர்கள் 86 முறை மாநில – மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளைப்  பெறுவதற்குப் பொறுப்பாசிரியராக இருந்தவர்*
*மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் 33முறை முதல் பரிசு பெற்றவர். 30.12.1990 இல் நடைபெற்ற கீழக்கரை உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் உலகளாவிய ftpijg; போட்டியில் முதற்பரிசு பெற்றவர்*.


*♦️கோவை -செம்மொழி மாநாட்டில்* *முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முன்னிலையில்* *கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவி பாடியவர்*.
*முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முன்னிலையில் பல கவியரங்குகளில் தமிழ்முழங்கியவர்*  *கவிதை – ஆய்வுக் ,கட்டுரை – இலக்கண இலக்கிய நூல்கள் படைத்தவர்* *14  நூல்கள் எழுதியவர் உலகத்தரச் சான்றிதழ் பெற்ற 13 ஆய்வுக் கட்டுரைகள் – படைத்தவர்*


*♦️2000- இல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலை நாடுகளில் தமிழ் இலக்கியப் பொழிகள் ஆற்றியவர். தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் மாண்புமிகு தமிழ்க்குடிமகன் அவர்களின் நேர்முக உதவியாளராகப்  பணியாற்றியவர்*.

*♦️9.6.1995 - அன்று  இசைஞானி  இளையராஜா – சுஜாதா நடத்திய பல்லாயிரம்பேர் பங்கேற்ற திரைப்படப் பாடலாசிரியருக்கான போட்டியில்  முதல் பரிசு தங்கப் பேனா பெற்றவர். அழகி படத்தின் மூலம் பாடலாசிரியாக அறிமுகமானவர்*
.
*♦️மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்,  மாண்புமிகு தமிழக முதல்வர் குறித்து  தமிழ் திரைப்படப் பாடகர்கள் பாடிய பல நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர். அப்பாடல்களைச் சூரியனைப் பாடிய சுரங்கள்  என்ற நூலாக ஆக்கியவர்*
.
*♦️பேராசிரியராக - பாடலாசிரியராக – நடிகராக  இசையமைப்பாளராக உலாவரும் பன்முகத் திறமை பெற்றவர்*

*♦️பல்வேறு இலக்கிய அமைப்புகளில் மூலம் பாரதி -பாரதிதாசன்* – *டாக்டர் கலைஞர்- உவமைக் கவிஞர் சுரதா*  *விருதுகள் பெற்றவர்*
*சிறந்த* *பாடலாசிரியருக்கான V4 விருதும் பெற்றவர்*  *2010 – இல் தமிழக அரசின் சிறந்த* *ஆசிரியர்*  *விருதுபெற்றவர்*


*♦️மரபுக் கவிதை எழுதலாம் என்ற நூலில் யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட மரபுப் பாக்கள் எழுதுவது எப்படி என்று எளிய முறையில் விளக்கம் தந்துள்ளார்*. *உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் கவிஞர் இரா. கருணாநிதியை வாழ்த்தும்போது நுட்பமான மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவர்*  *என்று குறிப்பிடுவதும்*.
*பாரதியின் அந்த* *நயங்களை எல்லாம்* *கவிஞர்* *கருணாநிதியிடம் நான் பார்க்கிறேன் என்று* *இயக்குனர்  பாலச்சந்தர்* *குறிப்பிடுவதும்* *இவரின் மரபுக்கவிதைத் திறமைக்குச் சான்றுகளாகும்*

*♦️இவர்களைப் போல் கவிஞர் வாலி அவர்கள் தன்னுடைய அணிந்துரையில்       புதுக்கவிதையின் சிந்தனைகள் இவரின் மரபுகளில் தென்படுவது தான் என் புருவங்களைப் பொட்டுக்கு ஏற்றியது என்று குறிப்பிடுவதும் சுட்டத்தக்கது*

.
*♦️புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தன் வாழ்த்துரையில் இனிய தமிழ் இலக்கண மரபு மாண்பினை  நன்கு கற்றுணர்ந்த பாவலன் கவிஞர் கருணாநிதி என்று சுட்டுகிறார்*
*மு மேத்தா அவர்கள் வாழ்த்துரையில்   கவியரங்குகளில் கதாநாயகன் இலக்கிய மேடைகளின் இளவரசன் என்றும் வாழ்த்தியுள்ளார்* 


No comments:

Post a Comment