ஊற்றங்கரையில்
ஆகஸ்ட் 21 அன்று
நடைபெறும் *முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர்* *அறிவுமதி
தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ்
பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச்
சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் பல்லாங்குழியில் வட்டம் பார்த்த கவிஞரும்
பாடலாசிரியருமான யுகபாரதி*
!
*கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக்
குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், மரபு மற்றும் புதுக்கவிதைகளில்
தேர்ந்தவர் கவிஞர் யுகபாரதி .இது வரை ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்*
*ஜெய் பீம்*
படத்தில் *மண்ணிலே ஈரமுண்டு*...
*ரன்*
படத்தில் ‘’ *காதல் பிசாசே காதல் பிசாசே* ‘’
*திருடா
திருடி* படத்தில் *மன்மத ராசா மன்மத ராசா* ‘’
*கில்லி*
படத்தில் *கொக்கர* *கொக்கரக்கோ*’’
*சந்திரமுகி*
படத்தில் ‘’ *கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்* ‘’
*சண்டகோழி*
படத்தில் ‘’ *தாவணி போட்ட* ‘’
*வருத்தப்படாத
வாலிபர் சங்கம்* படத்தில் *ஊதா கலர் ரிப்பன்* ‘’
*ரம்மி*
படத்தில் *கூட மேல கூட வச்சு*
*போன்ற
மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை எழுதியுள்ளவர் தான் கவிஞர் யுகபாரதி*
*சிறந்த
பாடலாசிரியாருக்கான தமிழக அரசின் விருதை பெற்ற பெருமைக்குரியவர்*
*கவிஞர்
எழுத்தாளர் பதிப்பாளர் கட்டுரையாளர் என பன்முகங்கள் கொண்ட ஆளுமை அவர்* .
*மனப்பத்தாயம், பஞ்சாரம் தெப்பக்கட்டை* *நொண்டிக்காவடி*
*தெருவாசகம்* *அந்நியர்கள் உள்ளே வரலாம்* *போன்ற கவிதை தொகுப்புக்களை
வெளியிட்டுள்ளார்*
*கண்ணாடி
முன்*, *நேற்றைய
காற்று*, *ஒன்று* ,*நடுக்கடல்* *தனிக்கப்பல் வீட்டுக்கு* *வெளியே வெவ்வேறு சுவர்கள்
அதாவது* *நானொருவன் மட்டிலும் போன்ற கட்டுரை* *தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்*
*இளைஞர்களின்
நாடித்துடிப்பு அறிந்து துள்ளல் இசையில் தரமான* *தமிழ்ப்பாடல்களை அள்ளித்தரும்
ஆற்றல்மிகு இளைஞன் நல்ல கலைஞன் கவிஞர் யுகபாரதி ஊற்றங்கரைக்கு கவிதை பாட
வருகிறார்*
*இந்த
மண்ணின் கவிஞனை வரவேற்போம் வாருங்கள் ! வாருங்கள் !!*
No comments:
Post a Comment