Friday, August 19, 2022

பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயில்.....


 *♦️ஆகஸ்ட்  21  ஊற்றங்கரையில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் எண்ணாண்டு  எழில் தமிழ் பண்பாட்டு பெருவிழாமேடை அமைப்பு பணிகள் தொடங்கி விட்டன*


*♦️இயற்கை எழில் சூழ்ந்த ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள் அரங்கத்துடன் இணைந்த பரந்தவெளி மைதானத்தில் வண்ணங்களை வாரி தெறித்ததை போன்ற எழில்மிகு அரங்கத்தில் விழா நடைபெற உள்ளது*


*♦️முத்தமிழ் இலக்கியப் பேரவையின் விழா அரங்க நுழைவாயில்* *“பேராசிரியர் மா.நன்னன் நினைவு நுழைவாயில்”* *என பெயர் சூட்டப்பட்டு பார்வையாளர்களை* *ஈர்க்கும் வண்ணம் அமைக்கப்பட உள்ளது*
*நுழைவாயிலின் இருபுறமும் பேராசிரியர் மா.நன்னன் அவர்களின்*  *தமிழ் பணிகள் பதாகைகளில்* *காட்சிப்படுத்தப் பட* *உள்ளன*


*♦️HD தொழிநுட்ப வசதியில் பன்முகத்திரை மேடை அமைக்கப்பட்டுள்ளது , டிஜிட்டல் மேடையின் திரை மய்ய பகுதி திரை விலகி சிறப்பு விருந்தினர் வருகை உள்ளவாறு மேடை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வடிவமைக்கப் பட்டுள்ளது*


*♦️மேடையின் பின்புலத்திரையில் ஒரே நேரத்தில் மூன்று விதமான காட்சியை காணலாம் .மேடையின் முழுத்திரையில் நடைபெறவிருக்கும் நிகழ்வினையும் மேடையின் வலது புறத்திரையில் நிகழ்ச்சி நிரலையும் இடது புற திரையில் அடுத்து வரும் நிகழ்வு குறித்த செய்தியையும் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது*

*♦️அரங்கம் முழுவதும் துல்லியமான டிஜிட்டல் ஆடியோ ஒலியமைப்பு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது*

*♦️மேடை உள்அரங்கம் முழுவதும் கண்களை கூசாத Hallowgen விளக்குகளால் ஒளியூட்டப்பட உள்ளது*

*♦️விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் சுவையான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நேரம் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பெரிய திறந்தவெளி மைதானத்தில்  நான்கு இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*

*♦️அரங்கத்தின் பல இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (RO WATER) குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன*

*இன்னும் ...இன்னும் ....ஏராளாமான விரிவான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட உள்ளது .நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்ட மேடையின் அழகை நேரில் வந்து பாருங்கள் ! தமிழமுதம் பருகி சுவையுங்கள் ! வாருங்கள் ❗வாருங்கள்* ❗❗

No comments:

Post a Comment