Sunday, July 15, 2018

முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு பணிகள் துவங்கியது !


              ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக ஊற்றங்கரையின் திருவிழா போல் நடைபெற்று வரும் ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு நிகழ்விற்கான கலந்துரையாடல் கூட்டம் 13/07/2018 வெள்ளி மாலை 3 மணியளவில் ஊற்றங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

           இந்த நிகழ்விற்கு முத்தமிழ் இலக்கிய பேரவையின் பொருளாளர் முனைவர் க.அருள் வரவேற்புரையாற்றி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

             முத்தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலர்கள் தணிகை.ஜி.கருணாநிதி ,மருத்துவர் தேவராசு அவர்களும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள் மேனாள் பேரூராட்சித் தலைவர் வ.சுவாமிநாதன், ஆர் .டி அக்ரோ இன்புட்ஸ் தொழிலதிபர் இரா .தர்மலிங்கம் , சங்கர் கேப் உரிமையாளர் இர.உமாபதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் தலைவர் லோகநாதன், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் செயலர் மருத்துவர் இளையராஜா, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் .எஸ்.ஏ.காந்தன், வித்யா மந்திர் கல்லூரியின் செயலர் .ஆர் .இராசு, சதீஷ் மெடிக்கல்ஸ்
உரிமையாளர் அ .தேவராசன் , மேனாள் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி , பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ஆதிமூலம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் துணைத்தலைவர் செ.மா.கண்ணன், ஆசிரியர் கவி.செங்குட்டுவன் ( எ) செ இராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து உரையாற்றினர்.

            முத்தமிழ் இலக்கியப்பேரவையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் நான்காம் ஆண்டு நிகழ்வுகள் குறித்தும் பேரவை உறுப்பினர் பழ.பிரபு விவரித்தார் ,இலக்கியப் பேரவையின் விழா ஒருங்கிணைப்பாளர் ஜெ.வெங்கடேசன் நான்காம் ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார் , முத்தமிழ் இலக்கிய பேரவையின் தலைவர் கல்வியாளர் வே.சந்திரசேகரன் அவர்கள் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் எதிர்கால செயல்பாட்டிற்கான பொருளாதார பாதுகாப்பு குறித்து விளக்கியதுடன் ,நான்காம் ஆண்டு விழா வெகு சிறப்புடன் நடைபெற வழிகாட்டுதலை தமது உரையில் வழங்கினார்

             நிறைவாக வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இராசா நன்றியுரையுடன் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.

முத்தமிழ் இலக்கியப் பேரவை , ஊற்றங்கரை

தலைவர் : திருமிகு .வே.சந்திரசேகரன்
நிறுவனர் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்
செயலர் :திருமிகு .சீனி .திருமால்முருகன்
நிறுவனர் அதியமான் கல்வி நிறுவனங்கள்
பொருளர் : முனைவர் .க. அருள்
முதல்வர் ,வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

புரவலர்கள்

திருமிகு. ச .செங்கோட்டையன் சக்தி அன் கோ
திருமிகு. தணிகை .ஜி கருணாநிதி தணிகை ஜெராக்ஸ்
மருத்துவர் .வெ.தேவராசு கவின் மருத்துவமனை
மருத்துவர் .கவிநிலவு தமிழமுதன் சென்னை

உறுப்பினர்கள்

திருமிகு.வ.சுவாமிநாதன் மேனாள் பேரூராட்சித் தலைவர்
திருமிகு.பழ.பிரபு இராசா மருந்தகம்
திருமிகு.சென்னகிருட்டிணன் தலைமை ஆசிரியர் பசந்தி
மருத்துவர் .ந .இளையராஜா என் எஸ் பல் மருத்துவமனை
திருமிகு .இர.உமாபதி சங்கர் கேப்
திருமிகு .இரா .தர்மலிங்கம் ஆர் .டி அக்ரோ இன்புட்ஸ்
திருமிகு.டி.எஸ்.திருநாதன் தொழிலதிபர்
முனைவர்.இரா.தெய்வம் தமிழ்துறை தலைவர் வித்யா மந்திர்
திருமிகு.சு .தியாகராசன் எஸ்.வி .டி திருமண மண்டபம்
திருமிகு .எஸ்.ஏ.காந்தன் தலைமை ஆசிரியர் (ப.நி)
திருமிகு .சித.வீரமணி தலைமை ஆசிரியர் கஞ்சனூர்
திருமிகு .ஆர் .இராசு ஏ.ஆர் .எஸ் பெட்ரோலியம் எஜென்சீஸ்
திருமிகு.செ .ஆனந்தன் ஆசிரியர்
திருமிகு.அ .தேவராசன் சதீஷ் மெடிக்கல்ஸ்
திருமிகு.கு .செங்கோடன் மேனாள் செயலர் வித்யா மந்திர் கல்லூரி
திருமிகு .எம் .இராசா ஆர்.கே உணவகம்
திருமிகு .பொன்னுசாமி தலைமை ஆசிரியர் (ப.நி)
திருமிகு .பா.அமானுல்லா பாரூக் புட்வேர்
திருமிகு.எம் .வடிவேல் ஊடகவியலாளர்
திருமிகு .ஆதிமூலம் ஆசிரியர் (ப.நி) கீழ்குப்பம்
திருமிகு .செ.மா.கண்ணன்
திருமிகு .லோகநாதன் சேகர்
திருமிகு.கவி.செங்குட்டுவன் (எ) செ.இராசேந்திரன் தலைமை ஆசிரியர்

No comments:

Post a Comment