Saturday, August 18, 2018

செயல் வீரர் செ.மு………

     செ.மு என்றும் MLC என்றும் அழைக்கப்படும் ஆசிரியர் சங்கப்போராளி செ.முத்துசாமி அவர்கள்

  
சேந்தமங்கலம் அருகில் உள்ள மருவூர்பட்டியில் செல்லப்பன் காளியம்மாள் தம்பதியருக்கு மகனாக 10.03.1937 ஆம் ஆண்டு பிறந்தவர்

   
சேந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1953இல் எஸ்.எஸ் .எல்.சி தேறியவர்

    1954—1956
திருச்சி இருங்கலூர் புதிய தரங்கம்பாடி ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்று இடைநிலை ஆசிரியராக தேர்ச்சி பெற்றார்

    
திராவிட முன்னேற்ற கழகம் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்த திருச்சி திமுக இராண்டாவது மாநில மாநாட்டில் மாணவராக பங்கேற்று தமது பொதுவாழ்வை துவக்கினார்

       1956
சூன் முதல் 1957 மே மாதம் வரை சேந்தமங்கலம் வன்னிய குல சத்திரியர் ஆரம்ப பள்ளியிலும் 1957 செப்டம்பர் முதல் சேலம் ஜில்லா போர்டு நைனாமலை பள்ளிப்பட்டி பள்ளியிலும் பணியாற்றினார்

     196
இல் சேந்தமங்கலம் பஞ்சாயத்து இராமநாதபுரம் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார்

        196
டிசம்பரில் நாமக்கல் வட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 5 வது வட்ட மாநாட்டை சேந்தமங்கலம் சேந்தமங்கலம் சினிமா கொட்டகையில் எல்லா கட்சி தலைவர்களையும் அழைத்து மாநாட்டு செயலாளராக நடத்தியவர்

196
முதல் 1962 வரை நாமக்கல் வட்ட செயலாளாராக பணியாற்றியவர்

1962
இல் நாமக்கல் வட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்

     
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் வட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் இவர் தலைமையில் இணைந்தது

      1964
தருமபுரி கிருஷ்ணகிரி உள்ளடக்கிய சேலம் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சேலம் மாவட்டத்தில் 35 வட்டாரங்கள் 8 நகராட்சிகளிலும் கிளைகள் துவக்கப்பட்டது



       1967
ஜனவரி 8 ஆம் நாள் சேலம் மாவட்ட 7 வது மாநாடு சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்றது பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர் .அரங்கம் நிரம்பி வழியும் வண்ணம் 3௦௦௦ க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

       1969
டிசம்பர் 29 இல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில கோரிக்கை மாநாட்டில் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் உள்ளாட்சி துறை அமைச்சர் பாவலர் முத்துசாமி அவர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் .மாநாட்டின் பயனாய் சில கோரிக்கைகளை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார் இவ் சிறப்பு மிகுந்த மாநாட்டில் இவர் மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்



      1970
ஏப்ரலில் நடைபெற்ற சேலம் தருமபுரி கோவை நீலகிரி ஆசிரியர் தொகுதி தேர்தலில் போட்டியிட்டு வாக்குரிமையே இல்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் வாக்குரிமையை பெற்று ஆளும் கட்சி வேட்டபாளரை முறியடித்து ஒரு வரலாற்று வெற்றியை பெற்றார்

1971
டிசம்பர் 3 மதுரையில் 7 வது மாநில மாநாட்டை நடத்தினார்

        1972
மே மாதம் இவர் தலைமையில் 1௦௦௦ க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறத்தி போராடியதற்காக கைது செய்யப்பட்டு 18 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர் .போராட்டத்தின் பயனாய் மூன்று கோரிக்கைகளை முதலமைச்சர் கலைஞர் நிறைவேற்றி தந்தார்

      1970 -1976
வரை கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆசிரியர் தொகுதி சட்ட மன்ற மேலவை உறுப்பினராக செயல்பட்டார் 1976 முதல் 1984 வரை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை தோற்கடித்து எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இரண்டாவது முறை மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்



      1977
இல் எம்.ஜி.ஆர் அவர்களால் இராசிபுரம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கப்பட்டும் ஆசிரியர் நலன்தான் முக்கியம் என சங்க பணிகளுக்காக அரசியல் அழைப்பை நிராகரித்தார்



      1981
மார்ச் 10 ,11 தேதிகளில் தமிழ்நாட்டிலிருந்து 7௦௦ பெண்கள் உள்ளிட்ட 25௦௦ ஆசிரியர்களை டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் இந்திராகாந்தி முன்னாள் அமர வைத்து கோரிக்கையை வலியுறுத்தி வெற்றி பெற்றார் இம் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் கலைஞர் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசாணையிட்டு பெருமைப்படுத்தினார்



      2012
கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற பவழவிழா மாநாட்டில் மேனாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களும் இஸ்ரோ ஆய்வறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



   
நியு ஜெர்சியில் உள்ள வடஅமெரிக்க தமிழ்சங்க பேரவை (FETNA) சார்பில் 03 /07 /2016 நடைபெற்ற விழாவில் பொதுவாழ்வில் ஆற்றிய உயரிய பணிகளை பாராட்டி சாதனையாளர் விருது அளித்து சிறப்பிக்கப்பட்டார்

7/10/2016
அன்று வாசிங்டன் நகரில் உலக தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் ஆற்றிய சேவையினை பாராட்டி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்

No comments:

Post a Comment