Friday, October 14, 2022
Saturday, August 27, 2022
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் குறித்த அறிமுகக் காணொலி....
அமைச்சர் மா.சு....
அறிந்ததும், அறியப்படாததும்....
ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை....
ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் “வாழ்நாள் சாதனையாளருக்கான முத்தமிழ் விருது” கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு வழங்கிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் குறித்த அறிமுகக் காணொலி
https://youtu.be/GwA2vTBUwik
Saturday, August 20, 2022
பாடலாசிரியர் கபிலன்......
*சங்க இலக்கியத்தின் கபிலன் சுந்தரத் தமிழெடுத்தவன்*
*தற்காலத்தமிழில் கபிலன் சந்தனத் தமிழ் எடுத்தவர்*.
*தமிழ் இலக்கிய ஆய்வாளர்.சென்னை மண்ணின் மக்கள் வாழ்வை அவர்களின் உடலுழைப்புப் பாடல்களான 'கானா பாடல்களில்' தன் ஆய்வை முடித்தவர்*.
*முறையாக தமிழ் இலக்கியம் பயின்றவர்*.
*எகிறி குதித்தேன் வானம் இடித்தது என்றபாடல் மூலம் திரையில் குதித்தவர்*.
*உன் சமையலறையில் நீ உப்பா சர்க்கரையா என்று கேட்டு திரைப்பாடல்களில் புதிதாய்ச் சிந்தித்தவர்*.
*கரிகாலன் காலப்போல கருத்திருக்கு குழலு என்று புது உவமைச் சொன்னவர்*
*ஏராளமான வெற்றிப்பாடல்கள் இவரின் விரல்களிலிருந்து கசிந்தவை*
*உன்ன நெனச்சி நெனச்சி உருகிப்போனேன் மெழுகா என்றவர்
பொன்னியின் செல்வன் படத்திலும் இவரின் பாடல் இடம் பெற்றிருக்கிறது என்பது உண்மை*
சொற்கோ முனைவர் கருணாநிதி......
– “சொற்கோ முனைவர் கருணாநிதி”* *வரவேற்போம் வாருங்கள் !*







*ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர் அறிவுமதி தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் இலக்கிய மேடைகளின் இளவரசன் – “சொற்கோ முனைவர் கருணாநிதி*
*
முனைவர் சொற்கோ இரா. கருணாநிதி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். 20 ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியர் - பணி அனுபவம் பெற்றவர்*.*
1991-இல் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவைnahட்டி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய தமிழக அளவிலான கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதன் இப்பரிசினை வழங்கினார்**
பல தங்கப்பதக்கங்கள் பெற்றவர். பள்ளிப்பருவத்திலிருந்து மரபுப்பாக்கள் எழுதும் ஆர்வமுடையவர். நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி மாணவர்கள் 86 முறை மாநில – மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளைப் பெறுவதற்குப் பொறுப்பாசிரியராக இருந்தவர்**மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் 33முறை முதல் பரிசு பெற்றவர். 30.12.1990 இல் நடைபெற்ற கீழக்கரை உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் உலகளாவிய ftpijg; போட்டியில் முதற்பரிசு பெற்றவர்*.
*
கோவை -செம்மொழி மாநாட்டில்* *முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முன்னிலையில்* *கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் கவி பாடியவர்*.*முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முன்னிலையில் பல கவியரங்குகளில் தமிழ்முழங்கியவர்* *கவிதை – ஆய்வுக் ,கட்டுரை – இலக்கண இலக்கிய நூல்கள் படைத்தவர்* *14 நூல்கள் எழுதியவர் உலகத்தரச் சான்றிதழ் பெற்ற 13 ஆய்வுக் கட்டுரைகள் – படைத்தவர்*
*
2000- இல் அழகப்பா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்து முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலை நாடுகளில் தமிழ் இலக்கியப் பொழிகள் ஆற்றியவர். தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சர் மாண்புமிகு தமிழ்க்குடிமகன் அவர்களின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர்*.*
9.6.1995 - அன்று இசைஞானி இளையராஜா – சுஜாதா நடத்திய பல்லாயிரம்பேர் பங்கேற்ற திரைப்படப் பாடலாசிரியருக்கான போட்டியில் முதல் பரிசு தங்கப் பேனா பெற்றவர். அழகி படத்தின் மூலம் பாடலாசிரியாக அறிமுகமானவர்*.
*
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் குறித்து தமிழ் திரைப்படப் பாடகர்கள் பாடிய பல நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர். அப்பாடல்களைச் சூரியனைப் பாடிய சுரங்கள் என்ற நூலாக ஆக்கியவர்*.
*
பேராசிரியராக - பாடலாசிரியராக – நடிகராக இசையமைப்பாளராக உலாவரும் பன்முகத் திறமை பெற்றவர்**
பல்வேறு இலக்கிய அமைப்புகளில் மூலம் பாரதி -பாரதிதாசன்* – *டாக்டர் கலைஞர்- உவமைக் கவிஞர் சுரதா* *விருதுகள் பெற்றவர்**சிறந்த* *பாடலாசிரியருக்கான V4 விருதும் பெற்றவர்* *2010 – இல் தமிழக அரசின் சிறந்த* *ஆசிரியர்* *விருதுபெற்றவர்*
*
மரபுக் கவிதை எழுதலாம் என்ற நூலில் யாப்பிலக்கணத்திற்கு உட்பட்ட மரபுப் பாக்கள் எழுதுவது எப்படி என்று எளிய முறையில் விளக்கம் தந்துள்ளார்*. *உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் கவிஞர் இரா. கருணாநிதியை வாழ்த்தும்போது நுட்பமான மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவர்* *என்று குறிப்பிடுவதும்*.*பாரதியின் அந்த* *நயங்களை எல்லாம்* *கவிஞர்* *கருணாநிதியிடம் நான் பார்க்கிறேன் என்று* *இயக்குனர் பாலச்சந்தர்* *குறிப்பிடுவதும்* *இவரின் மரபுக்கவிதைத் திறமைக்குச் சான்றுகளாகும்*
*
இவர்களைப் போல் கவிஞர் வாலி அவர்கள் தன்னுடைய அணிந்துரையில் புதுக்கவிதையின் சிந்தனைகள் இவரின் மரபுகளில் தென்படுவது தான் என் புருவங்களைப் பொட்டுக்கு ஏற்றியது என்று குறிப்பிடுவதும் சுட்டத்தக்கது*.
*
புலவர் புலமைப்பித்தன் அவர்கள் தன் வாழ்த்துரையில் இனிய தமிழ் இலக்கண மரபு மாண்பினை நன்கு கற்றுணர்ந்த பாவலன் கவிஞர் கருணாநிதி என்று சுட்டுகிறார்**மு மேத்தா அவர்கள் வாழ்த்துரையில் கவியரங்குகளில் கதாநாயகன் இலக்கிய மேடைகளின் இளவரசன் என்றும் வாழ்த்தியுள்ளார்*
Friday, August 19, 2022
கவியரங்க நாயகன் கவிஞர் அறிவுமதி......
*கவியரங்க சூப்பர் ஸ்டார் ஊற்றங்கரைக்கு வருகிறார்*
கவிஞரும் பாடலாசிரியருமான யுகபாரதி.....
ஊற்றங்கரையில்
ஆகஸ்ட் 21 அன்று
நடைபெறும் *முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர்* *அறிவுமதி
தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ்
பனித்துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச்
சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் பல்லாங்குழியில் வட்டம் பார்த்த கவிஞரும்
பாடலாசிரியருமான யுகபாரதி*
!
*கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக்
குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர், மரபு மற்றும் புதுக்கவிதைகளில்
தேர்ந்தவர் கவிஞர் யுகபாரதி .இது வரை ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்*
*ஜெய் பீம்*
படத்தில் *மண்ணிலே ஈரமுண்டு*...
*ரன்*
படத்தில் ‘’ *காதல் பிசாசே காதல் பிசாசே* ‘’
*திருடா
திருடி* படத்தில் *மன்மத ராசா மன்மத ராசா* ‘’
*கில்லி*
படத்தில் *கொக்கர* *கொக்கரக்கோ*’’
*சந்திரமுகி*
படத்தில் ‘’ *கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்* ‘’
*சண்டகோழி*
படத்தில் ‘’ *தாவணி போட்ட* ‘’
*வருத்தப்படாத
வாலிபர் சங்கம்* படத்தில் *ஊதா கலர் ரிப்பன்* ‘’
*ரம்மி*
படத்தில் *கூட மேல கூட வச்சு*
*போன்ற
மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை எழுதியுள்ளவர் தான் கவிஞர் யுகபாரதி*
*சிறந்த
பாடலாசிரியாருக்கான தமிழக அரசின் விருதை பெற்ற பெருமைக்குரியவர்*
*கவிஞர்
எழுத்தாளர் பதிப்பாளர் கட்டுரையாளர் என பன்முகங்கள் கொண்ட ஆளுமை அவர்* .
*மனப்பத்தாயம், பஞ்சாரம் தெப்பக்கட்டை* *நொண்டிக்காவடி*
*தெருவாசகம்* *அந்நியர்கள் உள்ளே வரலாம்* *போன்ற கவிதை தொகுப்புக்களை
வெளியிட்டுள்ளார்*
*கண்ணாடி
முன்*, *நேற்றைய
காற்று*, *ஒன்று* ,*நடுக்கடல்* *தனிக்கப்பல் வீட்டுக்கு* *வெளியே வெவ்வேறு சுவர்கள்
அதாவது* *நானொருவன் மட்டிலும் போன்ற கட்டுரை* *தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்*
*இளைஞர்களின்
நாடித்துடிப்பு அறிந்து துள்ளல் இசையில் தரமான* *தமிழ்ப்பாடல்களை அள்ளித்தரும்
ஆற்றல்மிகு இளைஞன் நல்ல கலைஞன் கவிஞர் யுகபாரதி ஊற்றங்கரைக்கு கவிதை பாட
வருகிறார்*
*இந்த
மண்ணின் கவிஞனை வரவேற்போம் வாருங்கள் ! வாருங்கள் !!*
சமூகப் போராளி யாழன் ஆதி......
ஊற்றங்கரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கவியரங்கில் கவிஞர் அறிவுமதி தலைமையில் “தெளித்தலும் தெளித்தல் நிமித்தமும்” என்னும் பொது தலைப்பின் கீழ் வியர்வை துளி , மைத்துளி , கண்ணீர் துளி என மூன்று தனிச் சுற்றுக்களில் கவிதை பாட வருகிறார் சமூக போராளி யாழன் ஆதி !*
*யாழன்
ஆதியை அறிவீர்களா தோழர்களே ?*
*யாழன் ஆதி
தமிழில் எழுதிவரும் நவீனக் கவிஞர்களில் ஒருவர் . தலித் இலக்கியத்தின் முக்கிய
ஆளுமையாக செயல்பட்டுவருபவர்* .
*தாழ்த்தப்பட்ட, துன்பப்படும் மனிதர்களின் வாழ்க்கையில்
உள்ள வலியை கவிதை மூலம் உலகுக்கு தயங்காமல் வெளிப்படுத்தும் கவிஞன்.
யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் சமூகத்தில்
பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக போராடுவதையே நோக்கமாகக் கொண்டு
வாழ்பவர்*
*வானம்
பொய்த்து அரசுகள் வஞ்சித்து
இயற்கை கைவிட்ட விவசாயிகள் தங்களை கொத்தடிமைகளாக தோல் தொழிற்சாலையில் பதிவு செய்துகொண்டுள்ள
அவலம் நிறைந்த ஆம்பூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இவரின்
இயற்பெயர் பிரபு . தமிழ் மீதான பற்றால் யாழன்ஆதி என மாற்றி
வைத்துக்கொண்டார்*
*ஆசிரியராக பணியாற்றினாலும் இயற்கை மீது கொண்ட
காதலால்.... மனிதன் தான் வாழ இயற்கையை அழிப்பதை பொறுக்க முடியாமலும், பாலாறு பாழானதை பொறுக்க முடியாமல் அதை எப்படிச் சரி செய்வது என தீவிர
சுற்றுச்சூழல் ஆய்வில் ஈடுபட்டு அதற்காக களமாடும் போராளி யாழன் ஆதி* !
*தலித்
முரசு இதழில் முதல் பக்க கவிதைகளை எழுதிவருகின்றார். பல்வேறு இதழ்களில் படைப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. இவருடைய கவிதைகள்
ஆங்கிலம், மலையாளம்
போன்ற மொழிகளில்மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் இவருடைய செவிப்பறை நூலை பாடப்புத்தகமாக
வைத்திருந்தது*.
*கவிதை மட்டுமில்லாமல் அனைத்து இலக்கிய
வகைமைகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கின்றது. புதிய தலித்
எழுத்தாளர்களைப் பற்றி தலித் முரசில் மாற்றுப் பாதை என்னும் கட்டுரைத் தொடரை எழுதி
வருகிறார். சாம்பல் என்னும் குறும்படத்தையும் இவர் இயக்கி
இருக்கின்றார்*
*இசை உதிர்
காலம், செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா, போதலின் தனிமை, காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும், யாருமற்ற சொல், மனிதம் கொன்ற சாதியம், ஆம்பூர் (ஊர் வரலாற்று நூல்) ஆகிய படைப்புகளை
வெளியிட்டுள்ளார். தம்மபதம் என்னும் புத்தரின் போதனைகளை ஆங்கிலம் வழி
தமிழில் அவர் மொழிபெயர்த்திருக்கிறார்*.
*எழுத்தாளர் , கவிஞர் ,சூழலியல் செயற்பாட்டாளர் ,சமூக போராளி என பன்முகங்கள் கொண்ட ஆற்றல் மிகு ஆளுமையாக ஊற்றங்கரை இலக்கியமேடையில்
கவிதை விருந்து படைக்க வருகிறார் .தமிழ் என்னும் ஆயுதம் தாங்கி வரும் போராளியின் கவிதை வரிகளுக்காக காத்திருப்போம் !
வாருங்கள் யாழன் ஆதியை சந்தித்து மகிழ்வோம்!!*
.jpg)




