ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தொடக்க விழாவில் தலைமையேற்று பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கவிருக்கிறார் தினமணி நாளிதழின் ஆசிரியர் திருமிகு .கே .வைத்தியநாதன் அவர்கள்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் திரு கிருஷ்ணன் மற்றும் மீனாட்சி தம்பதியினருக்கு 1952 ம் ஆண்டு சூன் 24 ம் தேதி பிறந்தார். சுவாமி விவேகானந்தரை தனது குருவாகவும், தேசியக்கவி பாரதியாரை தன் வரலாற்று நாயகனாகவும், தேசப்பிதா மகாத்மா காந்தியை தன் வாழ்க்கை வழிகாட்டியாகவும் கொண்ட ஒரு தேசப்பற்று மிக்க சிறுவன் தன் பள்ளிப்பருவத்திலேயே “சேதுபதி” என்கிற கையெழுத்து பத்திரிக்கையின் மூலமாக தன் எழுத்தாளர் உலகிற்குகுள் அடியெடுத்து வைக்கிறார் வைத்தியநாதன்.
“தமிழகத்தில் திரும்புமிடமெல்லாம் திருவள்ளுவர் சிலையும், தமிழனின் வாழ்க்கை நெறியாக வள்ளுவமும், குழந்தைகளின் குரலிலெல்லாம் குறளும் ஒலிக்கும் காலம்தான் தமிழினத்தின் பொற்காலம்” என மேடை தோறும் முழங்கி வரும் இவர் திருக்குறளையே தன் வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்து வருகிறார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்ற குறளுக்கேற்ப அவர் எழுதுகோலைப் பிடித்து மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலே தன் முதல் பத்திரிக்கையை தொடங்கிய பொழுது அவரின் வயது ஒன்பதுதான், அனால் அச்சிறு வயதிலேயே அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், கவியரசர் கண்ணதாசன், ஈ.வெ.கி சம்பத் மற்றும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளை அவர் பேட்டி கண்டார் என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுதே அவரின் எழுதுகோலும் அவர் கடந்து வந்த உயரத்தின் அளவுகோலும் நமக்கு தெளிவாக புலப்படுகிறது.
தமிழ் - ஆங்கிலத்தில் கதை, கட்டுரை, கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர். பத்து மொழிகளில் செய்தி வழங்கும் செய்தி நிறுவனத்தையும் நடத்தியவர். இந்தியப் பிரதமர்களுடன் 12 வெளிநாடுகளுக்கு மேல் பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரையும் பேட்டி கண்டவர்.
தமிழ் அறிஞர்களை ஊக்குவிப்பது, தமிழ் இலக்கியங்களுக்கு உயிர் கொடுப்பது மற்றும் சமூகநலன் என தலைசிறந்த எழுத்தாளரான இவர் 2007 ம் ஆண்டு தினமணியின் ஆசிரியராக பொருப்பேற்றார். யாருக்கும் அஞ்சாத நெறிகள் என்ற தினமணியின் 84வருட பாரம்பரிய மிக்க பத்திரிக்கைக்கு ஒரு பாசமிகு பாதுகாவலராக செயல்படுகிறார்.
எழுதும்போது நீங்கள் எழுத்தாளராக எழுதுங்கள். அதை திரும்பப் படிக்கும்போதுஆசிரியராகப் படியுங்கள், எழுதும்போது எல்லாமே முக்கியமாகத்தான் தோன்றும் ஆனால் அதை ஆசிரியராக இருந்து படிக்கும்போதுதான் அதில் பாதிக்கு மேல் அவசியமற்றவை என்பது தெரியும் என்று ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசிரியர் “சாவி” அவர்களிடம் இருந்து பெற்ற இந்த பாடத்தை இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு இவரே ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.
திருவள்ளுவர் விருது, சேக்கிழார் விருது, சின்னப்ப பாரதி விருது, கபிலவாணர் விருது, மற்றும் தமிழக அரசின் உயரிய இலக்கிய விருதான தமிழ்த் தென்றல் திரு.வி.க விருதும் கொடுத்து இவரின் தமிழ் பணிக்கு மகுடம் சூட்டியுள்ளது. தினமணிபத்திரிகையில் ஆசிரியர் பணியில் இருக்கும்போதே அரசு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை கி. வைத்தியநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தலையங்க கலைவேந்தன், செங்கோல் கலைவேந்தர் என்ற பட்டங்களும் இவர் எழுத்துப் பணியை மென்மேலும் அழகு சேர்க்கின்றன. இவரின் புத்தகமான “உண்மை தெரிந்து சொல்வேன்”மூன்று தொகுப்புகளிலும் உள்ள 231 கட்டுரைகள், சமூகத்தின் பல்வேறு பிரச்னைகளைப் பேசுகிறது. 2007 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்த தலையங்கங்கள் ஈழப் பிரச்னை, போபர்ஸ் பிரச்னை, நந்திகிராம் பிரச்னை என தேசிய, சர்வதேச அளவிலான அம்சங்களையும் சமகாலத் தமிழக அரசியல் நிகழ்வுகளையும் விமர்சிக்கின்றன. முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் வெளிடப்பட்ட இந்த பல லட்சம் பிரதிகள் விற்று தீர்துள்ளன.
விருதுகளும் விமர்சனங்களும் நிறைந்த எழுத்து துறையில் “செல்லும் பாதை சரியாக இருந்தால் அதன் முடிவும் சரியாக தான் இருக்கும். அதனால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கண்ணியமானதாக இருக்க வேண்டும், அப்படி அமையப்பெற்றால் நம் வாய்மை வரலாற்றையும் கடந்து நிற்கும்”என்ற மகாத்மா காந்தியின் வழியில் பயணிக்கும் கண்ணியமிக்க எழுத்தாளர் மற்றும் தினமணியின் ஆசிரியர் திரு கி. வைத்தியநாதன் அவர்களை ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு நற்றமிழ் விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

No comments:
Post a Comment