Saturday, August 18, 2018

மாஃபா. பாண்டியராஜன் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் அமைச்சர் க.பாண்டியராஜன் .......

      விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தில் 1959 இல் ஏப்ரல் 26இல் கருப்பசாமிசிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக பிறந்தவர் தான் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் .பாண்டியராஜன் அவர்கள்

    
மாஃபா. பாண்டியராஜன் என்று பொதுமக்களால் அழைக்கப்படும் அமைச்சர் .பாண்டியராஜன் அவர்கள் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் . தமது தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் மிக வறுமையான சூழலில் வளர்ந்தவர். சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தீக்குச்சி அடுக்கும் வேலை பார்த்தபடி படிக்கவும் செய்தவர்.

      
சிவகாசியில் உள்ள எஸ்.ஹெச்.என்.வி பள்ளியில் பள்ளி படிப்பையும், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பி.யு.சி படிப்பையும் நிறைவு செய்தார். படிப்பில் முதல் மாணவராக விளங்கியதால் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் பி.டெக் பொறியியல் படிக்க இடம் கிடைத்தது. அங்கு சிறப்பாக படித்து தங்கபதக்கம் பெற்றார். அதன்பின் ஜாம்ஷெட்பூரில் உள்ள புகழ்பெற்ற புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். பின்னர் வங்காளத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எம்என்சியான ஆக்சிஜன் கம்பெனியில் மனிதவள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.

     1992
ம் ஆண்டு சிறிய முதலீட்டில் மாபா என்கிற .டி நிறுவனத்தை சென்னையில் துவங்கினார் அன்றில் இருந்து தமது நிறவனத்தின் பெயரை தமது பெயருடன் இணைத்து மாஃபா பாண்டியராஜன் என்று பலராலும் அறியப்பட்டார் சுமார் ரூ. 60,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் அயராத உழைப்பால் 2010ம் ஆண்டில் ரூ. 1000 கோடி இலக்கை எட்டியது. இதுவரை 3.5 லட்சம் ஊழியர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஐடி துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார்

     
தனது தாயார் பெயரில் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான கைம்பெண்களுக்கும் , ஏழை பெண்களுக்கும் கணினி தொழில் பயிற்சி, சிறுதொழில் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளார். அவரது மனைவி லதா பாண்டியராஜன் அந்த தொண்டு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.இவரின் ஏகம் அறக்கட்டளை மூலம் ஏகம் அறகட்டளை மூலம் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது . குடிசை பகுதிகளில் உள்ள திறமையான ஏழை விளையாட்டு வீரர்களின் திறமை பொருளாதார நிலைமையின் காரணமாக வீணடிக்க கூடாது என்னும் உயரிய நோக்கில் திசா விளையாட்டு கழகம்(DISHA SPORTS) ஏற்ப்படுத்தி உள்ளார் .இதன் மூலம் பயிற்சி பெற்ற ஏழை விளையாட்டு வீரர்கள் இந்திய அளவில் பரிசுகளை குவித்து வருகிறார்கள்.

     
அரசியல் ஆர்வம் காரணமாக பி.ஜே.பி.,யில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து பின்னர் தேமுதிகவில் தேர்தல் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் செயலாற்றினார் . 211 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்

        2016
சட்டமன்ற தேர்தலில் .. .தி .மு சார்பில் போட்டியிட்டு வென்றார் .இத் தேர்தலில் மாணவர்கள் பலருடன் கலந்தாலோசித்து MyAvadi App என்கிற பெயரில் செயலி ஒன்றை உருவாக்கி ஆவடி மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். சட்டமன்ற கூட்டத்தொடர்களில் தமக்கே உரிய புள்ளிவிவரங்களுடன் கூடிய பேச்சாலும் , ஆழமான ,ஆதரங்களுடன் கூடிய மென்மையான விவாதங்களால் அனைவரையும் ஈர்த்தார்

     
இவரின் செயல்பாடுகளால் பெரிதும் கவரப்பட்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பினை அளித்து பாராட்டினார் .முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் அரசியல் மாற்றங்களினால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை இழந்து மீண்டும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சராக மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அமைச்சரவையில் இணைந்தார்

     
தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ,தமிழ் பண்பாட்டிற்கும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் .குறிப்பாக ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக அரசு சார்பில் இவர் எடுத்த முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியது

     
அரசியல் பொதுவாழ்வில் எவ்வித குற்றசாட்டிற்கும் ஆளாகாமல்
ஒரு அரசுசாரா அரசியல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் லஞ்சம் வாங்காத சிறந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டுவிழாவில் ‘’திருவள்ளுவர் விருது’’ பெற இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
    
யு ஆர் அப்பாயின்டட் மற்றும் ஆயரத்தில் ஒருவன் என இரண்டு சுய முன்னேற்ற நூல்களை எழுதி உள்ளார்.

      
நாடக, நடிப்பு கலை பயிற்சி பள்ளியான ‘’கூத்துப்பட்டறை’’யின் இயக்குனர். விருதுநகர் காமராஜர் மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ,சொற்பொழிவாளர் என பன்முகங்களை கொண்ட ஆளுமையான தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் .பாண்டியராஜன் அவர்களை வாழ்த்துரை ஆற்ற அன்புடன் அழைக்கிறோம்

No comments:

Post a Comment