Thursday, August 1, 2019

ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் கலந்தாய்வு கூட்டம் !......



          ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு நிகழ்வு குறித்த கலந்தாய்வு கூட்டம்  31.08.2019 புதன்கிழமை  மாலை 6 மணியளவில் ஊற்றங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் காலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .

           கலந்தாய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நீதித்துறையிலும் தமிழ்  இலக்கிய துறையிலும் சிறப்பாக பணியாற்றி வரும் நீதி அரசர் ஆர் .மகாதேவன் அவர்களின் தாயார் ஆர் .கிருஷ்ணம்மாள்  மறைவிற்கு அனைவரும் எழுந்து நின்று ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினர் 
  
            இக் கலந்தாய்வு கூட்டத்திற்கு  முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் கல்வியாளர் வே.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார் ,முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பொருளாளர் முனைவர் .க .அருள் ,முத்தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலர்கள் தணிகை ஜி கருணாநிதி ,மருத்துவர் மருத்துவர் தேவராசன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர் .இக் கலந்தாய்வில்  முத்தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலர்கள் ,உறுப்பினர்கள் ,கல்லூரி பேராசிரிய பெருமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்
இக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன......

🔴  வருகிற ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9.30  மணி வரை ஊற்றங்கரை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ் திருவிழாவை சிறப்புடன் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .

🔴 முத்தமிழ் இலக்கியப் பேரவையின் அழைப்பிதழ்களை புரவலர்கள் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து வருகிற ஆகஸ்ட் 5 மாலை முதல் பொதுமக்களிடம் சேர்பிக்கும் பணியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது 

🔴 முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கவிதை மற்றும் கட்டுரை போட்டி நடத்தி விழா நிகழ்வில் பரிசு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது 
நிறைவாக கல்லூரியின் தமிழ் துறை தலைவர் முனைவர் .க .இராஜா நன்றி நவில கூட்டம் நிறைவுற்றது





No comments:

Post a Comment