ஒவ்வொருவரையும் முத்தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்விற்கு அழைத்திடுவோம் !
அழைப்பிதழ் பொதுமக்களிடம் சேர்க்கும் பணி இன்று தொடங்குகிறது !
மாலை 4.30 மணியளவில் வித்யா மந்திர் பள்ளி அருகே கூடுவோம் !!
ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் ஐந்தாம் ஆண்டு அருந்தமிழ் விழா அழைப்பிதழ்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து, அழைக்கும் பணி இன்று மாலை முதல் தொடங்க உள்ளது.
முத்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவரும் ஊற்றங்கரையின் முகவரியுமான கல்வியாளர் வே.சந்திரசேகரன் அவர்கள் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து துவக்கி வைக்க, முத்தமிழ் இலக்கியப் பேரவையின் பொருளர் முனைவர். க. அருள் அவர்கள் தலைமையில் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் அளித்து அழைக்கும் பணி இன்று (05-08-2019) மாலை மிகச் சரியாக 4.30 மணியளவில் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கப்பட உள்ளது
முத்தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலர்கள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஊற்றங்கரையின் பல்வேறு அமைப்புக்களில் உள்ள பொறுப்பாளர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த பணியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்