Saturday, August 18, 2018

*உலகத்தமிழர்கள் மத்தியில் ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை*


       
வருகிற ஆகஸ்ட் 19 ஊற்றங்கரையில் முத்தமிழ் இலக்கியப்பேரவையின் நான்காம் ஆண்டு நிகழ்வு நடைபெற உள்ளது ஊற்றங்கரை என்னும் சிறிய ஊரில் ஒலித்த தமிழ்முழக்கம் . இன்று உலகத்தமிழர்கள் வரை பரவி உள்ளது . கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற முத்தமிழ் இலக்கியப்பேரவையின் நிகழ்வுகள் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது .

       
இணையத்தில் YOUTUBE மூலமாக நிகழ்வுகளை கண்டு ரசித்தவர்களின் எண்ணிக்கை - *47,25,899*

      
அதுமட்டுமல்ல இணையத்தில் நிகழ்வுகள் உலகெல்லாம் பரவியுள்ள தமிழர்களால் பார்த்து இரசிக்கப்பட்டு *25,869* முறை (share ) பகிரப்பட்டுள்ளது.

      youtube
கணக்கீட்டின் படி முத்தமிழ் இலக்கியபேரவை நிகழ்வுகள் இணையம் மூலம் உலக அளவில் எந்தெந்த நாடுகளில் பார்க்கப்பட்டுள்ளது என்கிற பட்டியலை கீழே இணைத்துள்ளோம்

      *
ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப்பேரவை நிகழ்வுகளை இணையம் மூலம் கண்டு இரசித்த நாடுகளும் ,எண்ணிக்கையும் ;*

இதுவரை பார்த்தவர்களின் எண்ணிக்கை --- 47,25,899

இந்தியா -- 38,56,338
சவூதி அரேபியா --1,30,097
ஐக்கிய அரபு நாடுகள் –1,47,756
குவைத் -- 84,089
மலேசியா -- 95,432
சிங்கப்பூர் -- 83,955
United Kingdom -- 27,374
United States -- 40,462
பிரான்ஸ் -- 23,979
கத்தார் -- 38,514
கனடா -- 20,115
இலங்கை -- 61,932
ஜெர்மெனி --13,637
பஹ்ரைன் --17,220
சுவிட்சர்லாந்து -- 10,864
ஓமண் -- 19,426
ஆஸ்திரேலியா -- 8,804
டென்மார்க் -- 2,186
நார்வே -- 2,098
நெதர்லாந்து -- 2650
இத்தாலி -- 2,506
நியூசிலாந்து -- 1,181
மாலத்தீவு -- 2,304
ப்ருனே -- 2,213
லெபனான் --1,225
இந்தோனேசியா -- 2,014
ஹாங்காங் — 759
ஜப்பான் – 925
தென்கொரியா – 924
ஈராக் --789
தாய்லாந்து — 826
சுவீடன் – 513
பெல்ஜியம் – 455
ஜோர்டான் -- 648
நைஜீரியா – 361
தைவான் -- 283
வியட்நாம் -- 364
மொரிசியஸ் – 880
உக்ரைன் -- 349
பங்களாதேஷ் --1,831
தென்னாப்ரிக்கா - 441
தான்சானியா—288
அயர்லாந்து--288
பின்லாந்து — 218
ஆஸ்திரியா -- 145
கம்போடியா – 234
மியான்மர் — 754
கிரிஸ் – 124
கென்யா – 222
Unknown Region -- 1,640

       
இந்த பட்டியல் முதல் 5 நாடுகளின் பட்டியல் மட்டுமே ,சில நூறுகளில் நூற்றுக்கும் குறைவாக பார்த்த நாடுகளின் பட்டியல் இன்னும் நீளும் தமிழ் இலக்கிய மேடைகளில் ஊற்றங்கரை தனித்த அடையாளத்துடன் திகழ்வதை இந்த தரவுகளின் மூலம் அறியலாம்.

     
கடந்த மூன்று ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன உலகத்தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நிகழ்வுகள் *நேரலையில்* ஒளிபரப்பட உள்ளது .

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்……
....
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
என்கிறார் பாரதியார் !

*
தேமதுரத் தமிழோசை* *உலகமெலாம்*
*
பரவும் வகையில்* *ஊற்றங்கரையில் நடைபெறவிருக்கும் முத்தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்வுகளுக்கு தமிழர்களே அணி திரண்டு வாருங்கள் !வாருங்கள் !! என்று அன்புடன் அழைக்கிறோம்*❗

Sunday, July 15, 2018

முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு பணிகள் துவங்கியது !


              ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக ஊற்றங்கரையின் திருவிழா போல் நடைபெற்று வரும் ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நான்காம் ஆண்டு நிகழ்விற்கான கலந்துரையாடல் கூட்டம் 13/07/2018 வெள்ளி மாலை 3 மணியளவில் ஊற்றங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது

           இந்த நிகழ்விற்கு முத்தமிழ் இலக்கிய பேரவையின் பொருளாளர் முனைவர் க.அருள் வரவேற்புரையாற்றி நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

             முத்தமிழ் இலக்கியப் பேரவையின் புரவலர்கள் தணிகை.ஜி.கருணாநிதி ,மருத்துவர் தேவராசு அவர்களும் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் உறுப்பினர்கள் மேனாள் பேரூராட்சித் தலைவர் வ.சுவாமிநாதன், ஆர் .டி அக்ரோ இன்புட்ஸ் தொழிலதிபர் இரா .தர்மலிங்கம் , சங்கர் கேப் உரிமையாளர் இர.உமாபதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் தலைவர் லோகநாதன், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் செயலர் மருத்துவர் இளையராஜா, பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் .எஸ்.ஏ.காந்தன், வித்யா மந்திர் கல்லூரியின் செயலர் .ஆர் .இராசு, சதீஷ் மெடிக்கல்ஸ்
உரிமையாளர் அ .தேவராசன் , மேனாள் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி , பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் ஆதிமூலம். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு அறக்கட்டளையின் துணைத்தலைவர் செ.மா.கண்ணன், ஆசிரியர் கவி.செங்குட்டுவன் ( எ) செ இராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து உரையாற்றினர்.

            முத்தமிழ் இலக்கியப்பேரவையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் நான்காம் ஆண்டு நிகழ்வுகள் குறித்தும் பேரவை உறுப்பினர் பழ.பிரபு விவரித்தார் ,இலக்கியப் பேரவையின் விழா ஒருங்கிணைப்பாளர் ஜெ.வெங்கடேசன் நான்காம் ஆண்டு விழா ஏற்பாடுகள் குறித்தும் ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார் , முத்தமிழ் இலக்கிய பேரவையின் தலைவர் கல்வியாளர் வே.சந்திரசேகரன் அவர்கள் முத்தமிழ் இலக்கியப் பேரவையின் எதிர்கால செயல்பாட்டிற்கான பொருளாதார பாதுகாப்பு குறித்து விளக்கியதுடன் ,நான்காம் ஆண்டு விழா வெகு சிறப்புடன் நடைபெற வழிகாட்டுதலை தமது உரையில் வழங்கினார்

             நிறைவாக வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் இராசா நன்றியுரையுடன் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.

முத்தமிழ் இலக்கியப் பேரவை , ஊற்றங்கரை

தலைவர் : திருமிகு .வே.சந்திரசேகரன்
நிறுவனர் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்
செயலர் :திருமிகு .சீனி .திருமால்முருகன்
நிறுவனர் அதியமான் கல்வி நிறுவனங்கள்
பொருளர் : முனைவர் .க. அருள்
முதல்வர் ,வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

புரவலர்கள்

திருமிகு. ச .செங்கோட்டையன் சக்தி அன் கோ
திருமிகு. தணிகை .ஜி கருணாநிதி தணிகை ஜெராக்ஸ்
மருத்துவர் .வெ.தேவராசு கவின் மருத்துவமனை
மருத்துவர் .கவிநிலவு தமிழமுதன் சென்னை

உறுப்பினர்கள்

திருமிகு.வ.சுவாமிநாதன் மேனாள் பேரூராட்சித் தலைவர்
திருமிகு.பழ.பிரபு இராசா மருந்தகம்
திருமிகு.சென்னகிருட்டிணன் தலைமை ஆசிரியர் பசந்தி
மருத்துவர் .ந .இளையராஜா என் எஸ் பல் மருத்துவமனை
திருமிகு .இர.உமாபதி சங்கர் கேப்
திருமிகு .இரா .தர்மலிங்கம் ஆர் .டி அக்ரோ இன்புட்ஸ்
திருமிகு.டி.எஸ்.திருநாதன் தொழிலதிபர்
முனைவர்.இரா.தெய்வம் தமிழ்துறை தலைவர் வித்யா மந்திர்
திருமிகு.சு .தியாகராசன் எஸ்.வி .டி திருமண மண்டபம்
திருமிகு .எஸ்.ஏ.காந்தன் தலைமை ஆசிரியர் (ப.நி)
திருமிகு .சித.வீரமணி தலைமை ஆசிரியர் கஞ்சனூர்
திருமிகு .ஆர் .இராசு ஏ.ஆர் .எஸ் பெட்ரோலியம் எஜென்சீஸ்
திருமிகு.செ .ஆனந்தன் ஆசிரியர்
திருமிகு.அ .தேவராசன் சதீஷ் மெடிக்கல்ஸ்
திருமிகு.கு .செங்கோடன் மேனாள் செயலர் வித்யா மந்திர் கல்லூரி
திருமிகு .எம் .இராசா ஆர்.கே உணவகம்
திருமிகு .பொன்னுசாமி தலைமை ஆசிரியர் (ப.நி)
திருமிகு .பா.அமானுல்லா பாரூக் புட்வேர்
திருமிகு.எம் .வடிவேல் ஊடகவியலாளர்
திருமிகு .ஆதிமூலம் ஆசிரியர் (ப.நி) கீழ்குப்பம்
திருமிகு .செ.மா.கண்ணன்
திருமிகு .லோகநாதன் சேகர்
திருமிகு.கவி.செங்குட்டுவன் (எ) செ.இராசேந்திரன் தலைமை ஆசிரியர்

Monday, October 9, 2017

இரண்டாமாண்டு நிகழ்வுகளின் காணொளி

தொடக்க நிகழ்வில் இலக்கிய சுடர் நெல்லைக்கண்ணன் அவர்களின் தனியுரை

புலவர் புலமைபித்தன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு


புலவர் புலமைப்பித்தன் வழங்கிய ஏற்புரை 



இசைக்கவி இரமணன் வழங்கிய இசையுரை 


                                       
பழ கருப்பையா நடுவராக பங்கேற்ற பட்டிமன்றம் 

                              தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய தனியுரை
                                      

                                        இன்னிசை நகைச்சுவை பாட்டு மன்றம் 

இரண்டாமாண்டு நிகழ்வு குறித்த காணொளி